×

முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கியது. இதையடுத்து மேற்கண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கூட்டு நில ஆய்வை நடத்த உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கார் பார்க்கிங் அமைக்கும் விவகாரத்தில் தற்போது வரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு தரப்பும் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mullaip ,New Delhi ,Kerala government ,Mullai Periyar dam ,South Zone Green Tribunal ,Mullaip Periyar ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு