×

இரட்டை இலை சின்னம் – அதிமுகவுக்கு நோட்டீஸ்


டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று சூரிய மூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். சூரியமூர்த்தி அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என்று மனு அளித்தார். தான் அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள வரும் 25-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. சூரியமூர்த்தி வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

The post இரட்டை இலை சின்னம் – அதிமுகவுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Election Commission ,H.E. ,Secretary General ,Edappadi Palanisami ,Suriya Murthy ,Lok Sabha ,Sunnyamoorthy ,Supreme ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...