- ஜகன் மோகன்
- பாஜக
- சித்தம் மாநாடு
- ஆந்திரப் பிரதேசம்
- சர்மிளா
- விஜயவாடா திருமலை
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- விஜயவாடா
- ஜகன் மோகன்
*விஜயவாடாவில் சர்மிளா பேட்டி
திருமலை : மோசடிக்கு பாஜக முகவரி என்றால், பாஜகவின் வாரிசு ஜெகன் மோகன் தான் என விஜயவாடாவில் காங்கிரஸ் தலைவர் சர்மிளா பேசினார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சர்மிளா விஜயவாடாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடையே பேசியதாவது: ஆந்திராவில் இளைஞர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தேர்தல் பிரசாரத்தில் 2.30 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாக முதல்வர் ஜெகன் மோகன் உறுதியளித்தார். ஆனால் ஜெகன் சொன்ன சொல்லை மறந்துவிட்டார். கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களில் 2 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலங்களில் சந்திரபாபு வேலை வழங்கவில்லை என ஜெகன் மோகன் கூறினார். ஆனால் அவரும் நிறைவேற்றவில்லை. அரசாங்க வேலைகள் காலியாக இருந்தும் நிரப்பப்படவில்லை.
நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால், எங்களை தீவிரவாதிகளாகப் பார்கிறார்கள். வீட்டு சிறையில் வைத்தார்கள். குறைந்தபட்சம் கேள்வி கேட்கும் உரிமையை கூட எதிர்கட்சியினரிடம் இருந்து பறித்தனர். நீங்கள் கொடுக்க மாட்டீர்கள், பாஜக தராது. இந்த நாட்டில் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜக வந்த பிறகு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. மோடி அளித்த வாக்குறுதிப்படி 20 கோடிவேலைவாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பாஜக ஏமாற்றியுள்ளது. இளைஞர்களுக்கு நீதி வேண்டி காங்கிரஸ் கட்சி வாக்குறுதியுடன் அறிக்கை அளித்துள்ளது. இது இளைஞர்களுக்கான தேசிய அறிக்கை. நாட்டில் 30 லட்சம் வேலைகள் நிரப்பப்படும். தொழிற்பயிற்சி முறையில் தொழில் நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு காங்கிரஸ் ரூ.1 லட்சம் வழங்கும். வலுவான சட்டங்களைக் கொண்டு வருவோம்.
சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதாக காங்கிரஸ் உறுதியளிக்கிறது.யுவரோஷினி திட்டத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். தொடக்க வணிகத்திற்கான உத்தரவாதம் வழங்கப்படும். பாதயாத்திரையின் போது பிரச்னைகளை உணர்ந்து இளைஞர்களுக்காக ராகுல் காந்தி செயல்படுத்திய திட்டங்கள் இவை. தேர்தலில் நான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து வருகிறோம், விரைவில் அறிவிப்பேன். பாஜகவுடன் கூட்டணி நெறிமுறையற்றது, மாநிலத்திற்கு பாஜக என்ன செய்தது? சந்திரபாபு ஒரு பச்சோந்தி தேவைக்கேற்ப தனது வண்ணங்களை மாற்றுவதில் சந்திரபாபு நிகர் யாரும் இல்லை.
மாநிலத்திற்கு அந்தஸ்து தராதது பாஜகவுக்கு, போலவரம் திட்டத்துக்கு நிதி தராதது, மாநில பிரிவினை உறுதிமொழிகள் நிறைவேற்றாத பாஜகவுடன் சந்திரபாபுவும், பவண் கல்யானும் கூட்டணி வைத்துள்ளனர். பாஜகவுடன் ஏன் கூட்டணி என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். ஜெகன் நடத்தும் சித்தம் தேர்தல் கூட்டங்களுக்கு அரசின் வருவாயை கொள்ளையடிக்கிறார்கள். ஒரு மாநாட்டிற்கு ரூ.90 கோடி என இதுவரை ₹600 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இது யாருடைய பணம்? ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 கோடி வேலை என்று சொல்லி ஏமாற்றியது பாஜக. 2.30 லட்சம் அரசுத் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக ஜெகன் ஏமாற்றினார். மோசடிக்கு பாஜக முகவரி என்றால் பாஜகவின் வாரிசு ஜெகன் மோகன் தான். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஆந்திராவில் சித்தம் மாநாட்டிற்கு ₹600 கோடி செலவு மோசடிக்கு பாஜக முகவரி என்றால் பாஜகவின் வாரிசு ஜெகன்மோகன் appeared first on Dinakaran.