×

வெயில் காலங்களில் பருத்தி உடை அணிய வேண்டும்: சித்த மருத்துவர்கள் அறிவுரை

 

சிவகாசி, மார்ச் 11: வெயில் காலங்களில் மெத்தையில் படுக்க வேண்டாம், பருத்தி உடைகளை அணிய வேண்டும் என பழநியில் சித்த மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் கொளுத்துவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு நோய் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது:

கோடை காலங்களில் உப்பு, புளிப்பு, கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். பருத்தி உடைகளை அணிய வேண்டும். இரவில் மெத்தையில் படுக்காமல் தரையில் பெட்ஷீட் விரித்து படுக்க வேண்டும். காலை உணவாக கம்மங்கூழ், ராகி போன்றவற்றை பருக வேண்டும். வாசலில் மஞ்சள் தெளித்து வைத்தால் சூட்டை குறைக்கும். சீரக தண்ணீர் அருந்த வேண்டும். தேங்காய் சட்னி, பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

கொத்தமல்லி தழை சட்னி, புதினா மற்றும் இஞ்சி சட்டினிகளை சேர்த்துக் கொள்ளலாம். மதியம் வேளைகளில் சாதத்தை குறைந்த அளவும், காய்கறிகளை அதிகளவும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கிழங்கு வகை மற்றும் மாவு வகை வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்சத்து மற்றும் நீர் சத்து அதிகமுள்ள சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை அதிகளவு உட்கொள்ளலாம். நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா போன்ற பழ வகைகளை உண்ணலாம். இவ்வாறு கூறினர்.

The post வெயில் காலங்களில் பருத்தி உடை அணிய வேண்டும்: சித்த மருத்துவர்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Siddha ,Sivakasi ,Palani ,
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...