×

ஜப்பானில் இறந்த குமரி பொறியாளர் உடல் அடக்கம்

 

கருங்கல், மார்ச் 11: குளச்சல் பகுதியை சேர்ந்தவர் பீட்டர். அவரது மகன் பிண்டோ ஷரோன் (24). டிசிஎஸ் மென்பொருள் நிறுவன ஊழியர். கடந்த ஆகஸ்ட் 2023ல் ஜப்பானில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். அவர் தனது சக ஊழியருடன் 6வது மாடியில் உள்ள நிஷி ஓஜிமா பகுதியில் யுஆர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

பிப்ரவரி 22ம் தேதி காலை 7.30 மணியளவில் அவர் கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். இது குறித்து டிசிஎஸ் இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தது. இது சம்பந்தமாக ஜப்பானில் உள்ள ஜோடோ காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சொந்த விஷயமாக வியட்னாம் சென்றுள்ள நீதிபதி ஜெயந்தி, அவர்களது குடும்ப உறுப்பினர் மூலம் இது சம்பந்தமாக தகவல் அறிந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளர் பாலூர் தேவாவுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது இறந்தவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார். இந்த தகவலை அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சிமஸ்தான் ஆகியோரது கவனத்திற்கு பாலூர் தேவா கொண்டு சென்றார்.

இதையடுத்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடனும், ஜப்பான் என்.ஆர்.டி.ஐ.எ. அமைப்பாளர் கமல், டி.சி.எஸ் மனிதவள அதிகாரி கணேஷ் ஆகியோர் இணைந்து பிண்டோ ஷரோன் உடலை இந்தியா அனுப்பி வைத்தனர்.அதன்படி பிண்டோ ஷரோன் உடல் டெல்லி வந்தது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தது. நேற்று அவரது சொந்த ஊரில் இறுதிச்சடங்கு நடந்தது.

The post ஜப்பானில் இறந்த குமரி பொறியாளர் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Japan Karungal ,Peter ,Kulachal ,Pinto Sharon ,TCS ,Japan ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...