×

மேலூர் அருகே மகா சிவராத்திரி விழா கறி விருந்து: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 

மேலூர், மார்ச் 11: மேலூர் அருகே மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நேற்று பல்லாயிரக்கானோர் கலந்து கொண்ட கறி விருந்து வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேலூர் அருகே உள்ள சத்தியபுரம் தென்னந்தோப்பில், மிக பழமையான இலந்தை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் அருள்மிகு முத்துபிள்ளையம்மன் கோயில் இருக்கிறது. நேர்த்திக்கடன் இருந்த பக்தர்கள் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று, ஒவ்வொருவரும் 100 முழம் மல்லிகை பூவை கொண்டு வந்து இக்கோயிலில் வைத்து வணங்குவார்கள்.

அந்த மல்லிகை பூவை பரப்பி அதன் மீது பெண் சாமியார் ஒருவர் பாம்பு போல் ஊர்ந்தபடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார்.இதன்படி திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்த நிலையில், நேற்று பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 50க்கும் மேற்பட்ட ஆடுகள், 1200 சேவல்களை பலியிட்டு பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கும் வைபவம் நடைபெற்றது.

இதற்காக அங்குள்ள தோட்டத்திற்குள் சமையல் பணிகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. இப்பகுதி மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கறி விருந்து நிகழ்வில் பக்தியுடன் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் மேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post மேலூர் அருகே மகா சிவராத்திரி விழா கறி விருந்து: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri festival curry feast ,Melur ,Maha Shivratri festival ,Sathyapuram ,Mellur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!