×

இலங்கைக்கு கடத்துவதற்காக தொண்டி அருகே பதுக்கிய 400 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக தொண்டி அருகே இறால் பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இப்பகுதி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது.

இதையடுத்து, நேற்று மாலை சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் பதுக்கி வைத்திருந்த மூட்டைகளிலிருந்து சுமார் 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அருகிலுள்ள ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து இறால் பண்ணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்து யார், கடத்தலுக்கு தொடர்புடைய நபர்கள் குறித்தும் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post இலங்கைக்கு கடத்துவதற்காக தொண்டி அருகே பதுக்கிய 400 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Sri Lanka ,Ramanathapuram ,Customs Intelligence Unit ,Pudukottai district ,Mimisal beach ,Dinakaran ,
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு