×

சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு

 

ராமநாதபுரம், ஏப். 20: ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு சுறா மீன் துடுப்புகள் மற்றும் கடல் அட்டைகள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை ரோந்து மற்றும் தகவலின் பேரில் வனத்துறை, கடலோர காவல் படை ஆகியோர் பிடித்து ராமநாதபுரம் சுங்கத்துறையில் ஒப்படைத்து வருகின்றனர். இவ்வாறு கடந்த 2020-21ம் ஆண்டில் 120 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 446 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ரூ.பல லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள், சுறா மீன் துடுப்புகளை அழிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சுங்கக் துறை அலுவலகப் பின்புறம் பெரிய குழி தோண்டி அதில் பழைய கடல் அட்டைகள் மற்றும் சுறா துடுப்புகள் கொட்டி வைத்து, தீ வைத்து எரித்து அழித்தனர்.

The post சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Sri Lanka ,Gulf of Mannar ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...