×

மத்தியப் பிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து.. தலைநகர் போபாலில் பதற்றம்..!!

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மத்தியப் பிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து.. தலைநகர் போபாலில் பதற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Chief Secretariat Tension ,Bhopal ,Secretariat ,Bhopal, Madhya Pradesh ,Head ,Madhya ,Pradesh Chief Secretariat Tension ,
× RELATED மத்தியபிரதேசத்தில் விளையாட்டின்போது இளைஞருக்கு நேர்ந்த சோகம்