×
Saravana Stores

பந்தயத்தில் தோல்வியடைந்த விவகாரத்தில் அனுப்பினாரா? மனைவியின் நிர்வாண படத்தை நண்பர்களுக்கு அனுப்பிய புதுமாப்பிள்ளை கோர்ட்டில் சரண்

*காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

சேலம் : ஏற்காட்டில் மனைவியின் நிர்வாண படத்தை நண்பர்களுக்கு அனுப்பிய விவகாரத்தில், போலீசாரால் தேடப்பட்டு வந்த புதுமாப்பிள்ளை கோர்ட்டில் சரண் அடைந்தார். நண்பர்களிடம் பந்தயம் கட்டி அதில் தோல்வி அடைந்ததால், மனைவியின் நிர்வாண படத்தை அனுப்பினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு செந்திட்டு பக்கமுள்ள கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்(23). இவர் காரிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து, கடந்த மாதம் 17ம்தேதி, அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்று, திருமணம் செய்து ெகாண்டார். வேலைக்கு சென்ற மகள் திரும்பி வராத நிலையில், காரிப்பட்டி போலீசில் பெற்ேறார் புகார் செய்தனர்.

போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட செந்தில், புதுமனைவியுடன் ஏற்காடு போலீஸ் ஸ்டேசனில் தஞ்சமடைந்தார். விசாரணையில் கணவருடன் தான் செல்வேன் என, அப்பெண் கூறியதையடுத்து, செந்திலுடன் அவரை அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், கடந்த வாரம் புதுப்பெண், கணவர் செந்திலுக்கு தெரியாமல் ஏற்காட்டிலிருந்து தப்பி, பெற்றோர் வீட்டிற்கு ஓடி வந்தார்.

அப்போது, தனது நிர்வாண படத்தை, கணவன் அவருடைய நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்து விட்டார் என கூறி கண் கலங்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீசார், புதுமாப்பிள்ளை செந்திலை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர், நேற்று வாழப்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை வரும் 22ம்தேதி வரை, சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சன்மதி உத்தரவிட்டார்.

போலீசாரின் விசாரணையில், இளம்பெண்ணை காதலிக்கும் போது, அவரை ஆடைகளை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தி, அதனை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்து ரசித்துள்ளார். அப்போது அதனை அப்பெண்ணுக்கு தெரியாமல் பதிவு செய்து கொண்டு, திருமணமான பின்பு நண்பர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனிடையே, அந்த படத்தை வைத்தே, அப்பெண்ணை மிரட்டி திருமணம் செய்திருக்கலாம் எந்த சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

இதையடுத்து வாலிபர் செந்திலை, 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். காதலித்து மணந்த பெண்ணின் நிர்வாண படத்தை எதற்காக அனுப்பினார்? நண்பர்களுடன் ஏதாவது பந்தயம் கட்டி அதில் தோற்றதால் படத்தை அனுப்பினாரா? அல்லது அவர் சைக்கோவா? என போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். மேலும், அவர் நிர்வாண படத்தை அனுப்பிய நண்பர்களையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post பந்தயத்தில் தோல்வியடைந்த விவகாரத்தில் அனுப்பினாரா? மனைவியின் நிர்வாண படத்தை நண்பர்களுக்கு அனுப்பிய புதுமாப்பிள்ளை கோர்ட்டில் சரண் appeared first on Dinakaran.

Tags : Saran ,Pudumapillai Court ,Salem ,Pudumappillai ,Yercaud ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை மளிகை கடைக்காரர் கோர்ட்டில் சரண்