- சென்னை
- சென்னை மாவட்ட ஆட்சியர்
- ரஷ்மி சித்தார்த் ஜகாடே
- மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்
- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
- சிங்காரவேலர் இல்லம், ராஜாஜி சாலை, சென்னை-01
- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம்
- தின மலர்
சென்னை, மார்ச் 9: சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான ‘மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்,’ வரும் 12ம் தேதி, காலை 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி, பயனடையுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்: 12ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.