- பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
- பவித்திரம்
- Paramathi
- பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
- பவித்திரம்
- பகவதியம்மன் கோயில்
- கே.பாரமதி யூனியன்
- பகவதி அம்மன்
- கே. பரமத்தி
க.பரமத்தி,மார்ச் 8: க.பரமத்தி அடுத்த பவித்திரம் பகுதியில் பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் பகவதியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி பூஜையும் முக்கிய விரத நாட்களில் பகவதிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இத்திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதத்தில் 3நாட்கள் பக்தர்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த கடந்த 18ம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியில் நிச்சயிக்கப்பட்டு திருவிழா தொடங்கியது. கடந்த 3ந்தேதி அம்மனுக்கு பக்தர்களால் வழிபாடு நடத்தப்பட்டு அருகேயுள்ள கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு கோயிலை வந்தடைந்ததுடன் வைக்கப்பட்ட பொங்கலை ஒவ்வொரு பானையிலிருந்தும் எடுத்து அனைத்தையும் ஒன்று சேர்த்து படைத்து வடிசோறு பூஜை, மாவிளக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னர் மறுநாள் 4ம் தேதி காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் கொண்டு வரப்பட்டு சாமிக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து மாவிளக்கு பூஜை வழிபாடுகளும் தொடர்ந்து மறுநாள் 5ம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் கரகம் கிணற்றில் விடப்பட்டு மறு அபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைந்ததது. ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.
The post க.பரமத்தி பகுதி விவசாயிகள் கவலை பவித்திரம் பகுதியில் பகவதியம்மன் கோயில் பொங்கல் திருவிழா appeared first on Dinakaran.