×

தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது

சென்னை: மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (9ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.  மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

The post தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Ration Card Grievance Camp ,Tamilnadu Govt. ,Chennai ,Distribution Program ,Grievance Camp ,19 Zonal Assistant ,Food Supply and Consumer Protection Department ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...