×

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – சென்ட்ரல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் இடையே அதிவேக விரைவு ரயில்கள் (06019, 06021) நாகர்கோவிலிருந்து வரும் 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறுநாள் மதியம் 12.10 மணிக்கு வந்தடையும்.

அதேபோன்று மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே அதிவேக விரைவு ரயில் (06020, 06022) வரும் 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

The post ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் – சென்ட்ரல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Central ,Holi ,Chennai ,Southern Railway ,Chennai Central ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...