×

கோவை ஈச்சனாரியில் 3400 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுக்கரை,மார்ச்7: கோவையை ஈச்சனாரியில் தமிழக அரசின் சார்பில் 3400 பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கல்லூரியில் நேற்று இலவச வீட்டுமனை பட்டா, தாலிக்கு தங்கம்,தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் தலைமை தாங்கினார்.திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன்,மதுக்கரை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரகாஷ்,மாவட்ட கவுன்சிலர் ராஜன்,ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா வரவேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்டு 3400 பயனாளிகளுக்கு இ.பட்டா,இலவச வீட்டுமனை பட்டா,தையல் இயந்திரம், தாலிக்கு தங்கம்,முதலமைச்சர் காப்பிட்டு திட்ட அட்டைகள் ஆகியவற்றை வழங்கி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
தமிழக முதல்வராக தளபதி மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் தான் இந்த விழா நடைபெற்று கொண்டிருக்கிறது.

இங்கு ஆயிரக்கணக்கான பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெறும் விழாவை வருவாய்த்துறையினர் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள் அதற்காக அவர்களை பாராட்ட வேண்டும் என்று பேசினார்.மேலும் இந்த விழாவின் போது கோவை மாவட்டத்தில் மலுமிச்சம்பட்டி, பாலத்துறை, கோதவாடி உள்ளிட்ட 20 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடைகளை மேடையில் இருந்து அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் கோட்ட வருவாய் அலுவலர் பண்டரிநாதன்,மதுக்கரை தாசில்தார் சத்தியன்,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன்,ஒன்றிய செயலாளர் விஜியசேகரன்,ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட தலைவர் சீரபாளையம் செந்தில்குமார்,நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவை ஈச்சனாரியில் 3400 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Echanari, Coimbatore ,Madhukarai ,Minister ,Muthuswamy ,Tamil Nadu government ,Karpagam College ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான டாக்டரின்...