×

பெரம்பலூரில் சிறப்பு மனு விசாரணை முகாம்: 39 நபர்களிடம் எஸ்பி விசாரணை

பெரம்பலூர், மார்ச் 7: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமையில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் 39 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று (6ஆம்தேதி) மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமை யில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுவைப் பெற்றார்.

மேலும் மனு அளித்த பொதுமக்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி மனுதாரரின் புகாரினைக் கேட்டறிந்து, அந்த புகாரினை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும் இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவ ட்ட குற்றப் பிரிவு டிஎஸ்பி தங்கவேல் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் சிறப்பு பிரிவு காவல் துறை யினர் கலந்து கொண்டு புகார் மனுக்களை பெற்று விசாரணை செய்தனர்.

முகாமில் பொதுமக்களிடம் இருந்து 39மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமையும் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பாக பாலக்கரையிலிருந்து எஸ்பி அலுவலகத்திற்கும் மீண்டும் எஸ்பி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர், மார்ச் 7: பெரம்பலூரில் நடைபெற்ற அரசு விழாவில்- இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உள்பட 4,572 பயனாளிக ளுக்கு ரூ23.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக கூட்ட அரங்கில் நேற்று (6ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி
தலைவர் குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

The post பெரம்பலூரில் சிறப்பு மனு விசாரணை முகாம்: 39 நபர்களிடம் எஸ்பி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,SP ,District SP ,District ,Shyamladevi ,Shyamla Devi ,Perambalur district SP ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி