×

வடமாநில வாலிபர் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள் வேலூரில் பரபரப்பு குழந்தை கடத்தல்காரன் என நினைத்து

வேலூர், மார்ச் 6: வேலூரில் குழந்தை கடத்தல்காரன் என நினைத்து வடமாநில வாலிபரை, பொதுமக்கள் சரமாரி தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவர் அங்கிருந்த பள்ளி குழந்தைகளிடம் பேச்சு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சந்தேகமடைந்து அவர் குழந்தை கடத்தும் நபர் என கருதினர். தொடர்ந்து அவரை பிடித்து, அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை வேலூர் தெற்கு போலீஸ் நிலையம் அழைத்து வந்து ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்தபோது அந்த நபர் வங்காள மொழி பேசும் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘குழந்தை கடத்தல்காரன் என பொதுமக்கள் ஒப்படைத்த நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜில்லுதா கோஷ்(45). சமூக வலைதளங்களில் குழந்தை கடத்த வந்தவன் எனக்கூறி தாக்கும் காணொளி பரவி வருகின்றது. இது முற்றியலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும். இந்த வீடியோவை பகிர்வதோ, பதிவிடுதோ சட்டப்படி குற்றாகும். உண்மைக்கு புறம்பான வீடியோக்களை பரப்பும் நபர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

The post வடமாநில வாலிபர் பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள் வேலூரில் பரபரப்பு குழந்தை கடத்தல்காரன் என நினைத்து appeared first on Dinakaran.

Tags : North State ,Vellore ,Northern State ,Vellore Old Town ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...