×

விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டம் நடத்தி 180 பேரிடம் ₹1.05 கோடி மோசடி

விழுப்புரம், மார்ச் 6: விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டம் நடத்தி 180 பேரிடம் ரூ.1.05 கோடி மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த நத்தர்பாஷா, சாதிக்பாஷா, அசாருதீன், ஷாஜி உள்ளிட்டவர்கள் கஸ்பாக்காரனை என்ற பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு பிஸ்மி நகர் என்ற பெயரில் வீட்டுமனை பிரிவு அமைத்துள்ளனர். அதில் மாதம் ரூ.1600 வீதம் 60 மாதங்கள் பணத்தை கட்டினால் அதற்குண்டான மனைப்பிரிவுகளை பதிவு செய்து தரப்படும் என்றும், அதனை போன்று கடந்த 2016ம் ஆண்டு பொய்யப்பாக்கம் பகுதியில் ரோஜா நகர் என்ற மனைப்பிரிவினை அமைத்து ரூ.1,200 வீதம் 55 மாதங்கள் செலுத்தினால் மனைப்பிரிவு பதிவு செய்து தரப்படும் என்று கூறியதை நம்பி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணத்தைக் கட்டி முதலீடு செய்தனர். ஆனால், வீட்டுமனை கொடுக்காமல் சுமார் 180 பேரிடம் ரூ.1.05 கோடி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சாதிக்பாஷா என்பவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டாவது குற்றவாளியான சாதிக்பாஷா கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நத்தர்பாஷாவையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை திட்டம் நடத்தி 180 பேரிடம் ₹1.05 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,Natdarpasha ,Sadikpasha ,Villupuram North Street ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...