×

கண்ணதாசன் நகர், முல்லை நகர் பேருந்து நிலையங்கள் ரூ.20 கோடியில் புதுப்பிப்பு: பணிகள் ெதாடங்கியது

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் முல்லை நகர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதாகவும், பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட கண்ணதாசன் நகர் மற்றும் முல்லை நகர் பேருந்து நிலையங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, அதை நவீனப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தனர். நேற்று, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் உள்ள கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் 1.31 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதை 13.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வடசென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஆர்.டி.சேகர் அடிக்கல் நாட்டினார். இதேபோன்று வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் 1.41 ஏக்கர் சதுர அடியில் உள்ள முல்லை நகர் பேருந்து நிலையத்தை 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகள் நேற்று காலை தொடங்கப்பட்டது. அதையும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் ெதாடங்கி வைத்தார்.

இந்த பேருந்து நிலை யங்களில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளன. 6 மாதத்திற்குள் இரண்டு பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் தண்டையார் பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு, ஜீவன், மாவட்ட துணை அமைப்பாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post கண்ணதாசன் நகர், முல்லை நகர் பேருந்து நிலையங்கள் ரூ.20 கோடியில் புதுப்பிப்பு: பணிகள் ெதாடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kannadasan Nagar ,Mullai Nagar ,Perambur ,Kodunkaiyur ,Kaviarasu ,Perambur Assembly Constituency ,Dinakaran ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது