×

கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.85 லட்சத்தில் சுகாதார மையம்: புதுப்பிப்பு பணி தொடக்கம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு கடந்த 2018ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக் திறக்கப்பட்டது. அதன் பின்னர் சில மாதங்களிலேயே பராமரிப்பு இல்லாமலும், போதுமான மருத்துவர்கள் இல்லாமலும் போனதால் கிளினிக் மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2020ல் கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் அம்மா கிளினிக் மூடப்பட்டது.

திமுக ஆட்சி வந்த பிறகு வியாபாரிகளின் நலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் சுதாதார மையம் அமைத்து தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் கூலி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சுகாதர மையம் கட்ட அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட அம்மா கிளினிக்கை சுகாதார மையமாக புதுப்பிக்க ரூ.85 லட்சம் மதிப்பில் திமுக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறப்பினர் பிரகாகர ராஜா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மற்றும் கூட்டமைப்பு அனைத்து சங்கங்களின் தலைவர் ஜி.டி.ராஜசேகரன், சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் மற்றும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.85 லட்சத்தில் சுகாதார மையம்: புதுப்பிப்பு பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Amma Clinic ,AIADMK ,Dinakaran ,
× RELATED வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு