×

போதைப் பொருள் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்பதற்காக அதனை தடுக்க முழு நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி

குமரி: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் கஞ்சா பயிரிடப்படாத பூமி. போதைப் பொருள் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்பதற்காக அதனை தடுக்க முழு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 ரவுடிகளை பாஜக கட்சியில் இணைத்துள்ளது. ஆளுநரின் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத்தில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பது நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

The post போதைப் பொருள் எதிர்கால சந்ததியை பாதிக்கும் என்பதற்காக அதனை தடுக்க முழு நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Raghupathi ,Kumari ,Law ,Nagercoil ,Tamil Nadu ,
× RELATED புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில்...