×

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கொடை விழாவை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. கேரள மாநில பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 12-ல் விடுமுறை அறிவித்து மவர்ற ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ஆம் தேதி விடப்படும் உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஏப்ரல் 6ஆம் தேதி பணி நாளாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

The post கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari District ,Kumari ,Mandaikkadu Bhagavatiyamman ,Sabarimala ,Mandaikkadu ,Bhagavathy ,Collector ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...