நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடிக்கு விற்கப்படுகிறது. அமெரிக்காவில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலகக் கோப்பை இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்துடன் விளையாடுகிறது, அதன் பிறகு ஜூன் 9 ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த பெரிய போட்டிக்கான டிக்கெட்டுகளின் விலை கோடிகளில் உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் உட்பட 2024 டி20 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடிக்கு விற்கப்படுகிறது. இந்தியாவின் 2 போட்டிகளுக்கான டிக்கெட் விலை கோடிகளில் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
The post டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை appeared first on Dinakaran.