×

மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் பெரம்பலூரில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு

பெரம்பலூர், மார்ச் 5: தமிழக அளவில் பிளஸ் 2 எனப்படும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கி வரும் 22ம்தேதிவரை நடை பெறுகிறது. 35தேர்வு மையங்களில் 79 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 7,094 பேர் தேர்வெழுதி வருகின்றனர். அதேபோல் பிளஸ் 1 எனப்படும் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று (4ம்தேதி) தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 79 மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 3,850 மாணவர்கள், 3,823 மாணவிகள் என மொத்தம் 7,673 பேர் 35 தேர்வு மையங்களில் எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் நாளான நேற்று (4ம் தேதி) திங்கட்கிழமை தமிழ் பாடத்திற்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 3,782 மாணவர்கள், 3,786 மாணவிகள் என மொத்தம் 7,568 பேர் 35 மையங்களில் எழுதினர். 68 மாணவர்கள், 37 மாணவிகள் என மொத்தம் 105பேர் தேர்வெழுத வரவில்லை. பிளஸ்-1 பொதுத் தேர்வை கண்காணிக்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனரும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான அரசு பொதுத் தேர்வுகள் கண்காணிப்பு அலுவலருமான அமுத வள்ளி,பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் மணிவண்ணன், பெரம் பலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜெகநாதன், கலாராணி, அண்ணாதுரை, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் ஆகிய 6 பேர் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வரும் 7ம் தேதி வியாழக்கிழமை ஆங்கிலம், 12ம் தேதி செவ்வாய்க்கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன், கணினி தொழில் நுட்பம், 14ம்தேதி வியாழக்கிழமை கம்ப்யூட்டர் சயின்ஸ், எத்திக்ஸ் அண்டு இண்டியன் கல்ச்சர், கம்ப்யூ ட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல்அறிவியல், நர்சிங் ஒக்கேஷனல்- பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 18ம்தேதி திங்கட்கிழமை உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாக்கம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேசிக் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், பேசிக் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, 21ம்தேதி வியாழக்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல், 25ம் தேதி திங்கட்கிழமை கணிதம், வணிகவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நுண்ணுயிரியல், டெக்ஸ்டைல் அண்டு டிரெஸ் டிசைனிங், நியூட்ரீ ஷியன் அண்டு டயடெடிஸ், ஃபுட் சர்வீஸ் அண்டு மேனே ஜ்மென்ட் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.

The post மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கல் பெரம்பலூரில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Tamil Nadu ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி