×

வருவாய்த் துறையினர் போராட்டம்

 

தேனி, மார்ச், 5: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று இரவு முதல் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் துவக்கப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த இச்சங்கத்தினர் ஒரு கோரிக்கை நிறைவேறிய நிலையில் மீதமுள்ள ஒன்பது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று இரவு முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர். இப் போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post வருவாய்த் துறையினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Revenue Department Officers' Union ,Theni District Collector ,Tamil Nadu Revenue Officers Association ,Revenue ,Dinakaran ,
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு