×

மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பட்டியலின மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது: காங்கிரஸ் கண்டனம்

சென்னை, மார்ச் 5: மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது என்று காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: மோடியின் பத்தாண்டு கொடுங்கோல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரத்தை அடைந்திருக்கிறார்கள். இதில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது. பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களில் மொத்தம் 10,064 வழக்குகள் பதியப்பட்டன. இது முந்தைய ஆண்டை விட 14.3 சதவிகிதம் அதிகம். பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்தபோதிலும், அதற்கான தண்டனை விகிதம் குறைந்துள்ளது.

பாஜ ஆளும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் தான் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன. நாடு முழுவதும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக மத்திய பாஜ அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சுமேஷ் படுகொலை பட்டியலின மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இதுபற்றி வாயை திறக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ பிரதமர் முயலவில்லை என்பது வெட்கக்கேடு. ஒரு பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால், பட்டியலின, பழங்குடியின மக்களை அழித்தொழிக்கும் வேலையை செய்யும் பாஜ மாநில முதல்வர்களுக்கு மோடி ஆதரவாக இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

The post மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் பட்டியலின மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது: காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Chennai ,Congress SC ,ST ,president ,Tamil Nadu ,Congress SC and ,Ranjan Kumar ,
× RELATED சொல்லிட்டாங்க…