×

பழநி பகுதியில் குளங்களை ஆக்கிரமித்து விவசாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

பழநி, மார்ச் 5: பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் இப்பகுதியில் உள்ள அணைகளை நம்பியும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களை நம்பியுமே இருந்து வருகிறது. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக கண்மாய், குளங்கள் போன்றவை நிரம்பி இருந்தன.

இக்குளங்களில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு செய்யப்பட்டதால் பல குளங்களின் நீர்ப்பிடிப்பு பகுதி சுருங்கி காணப்படுகிறது. இதனை எதிர்பார்த்து காத்திருந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், குளங்களின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கி உள்ளனர். பழநி அருகே பாலசமுத்திரத்தில் உள்ள மந்தைக்குளத்தில் பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்ப்பிடிப்பு பகுதி நீரின்றி உள்ளது.

இந்த நிலத்தில் தற்போது குறுகிய கால பயிரான தட்டை, உளுந்து, நிலக்கடலை, வெள்ளரி போன்றவை பயிரிடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டத்திலேயே பொதுப்பணி துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நீர்ப்பிடிப்பு பகுதியை காக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி பகுதியில் குளங்களை ஆக்கிரமித்து விவசாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Palani ,Kanmais ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து