×

ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல்

திருமலை: ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆந்திராவில் அக்டோபர் 2023ம் ஆண்டு 29ம் தேதி அன்று ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த விசாகப்பட்டினம் பலாசா பயணிகள் ரயில் மோதியது. இதில் 14 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வேறு துறை அதிகாரிகள் விசாரித்து நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கந்கப்பள்ளி கிராமம் அருகே கடந்த ஆண்டு லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் ஆகியோர் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தபோது இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மேலும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: அக்டோபர் 2023 ஆண்டு 29ம் தேதி அன்று ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கந்தகப்பள்ளியில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த ராயகடா பயணிகள் ரயில் மீது பின்னால் வந்த விசாகப்பட்டினம் பலாசா பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தில், பலாசா பயணியரில் ரயிலை ஓட்டி வந்த இரண்டு லோகோ பைலட்டுகளும் ரயிலை ஓட்டும்போது கவனம் சிதறி, ரயில் ஓட்டும் போது செல்போனில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் பணியில் இருக்கும் லோகோ பைலட்களை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பைக் கொண்டு வந்துள்ளோம். விபத்து நடந்த மறுநாளே விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு, அறிக்கை வருவதற்கு முன், விபத்தை ஏற்படுத்திய லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

The post ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Railway ,Minister ,Tirumala ,Railway Minister ,Ashwini Vaishnav ,Andhra Pradesh ,Vijayanagar ,
× RELATED சொந்த கட்சியிலே கடும் எதிர்ப்பு:...