×

திட்டமிட்டே விவசாயி சின்னம் மறுப்பு!: திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.. சீமான் பேட்டி..!!

சென்னை: திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்று சீமான் தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கரும்பு விவசாயி சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த சீமான், கர்நாடகாவில் ஒருவருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சின்னம் கேட்காமல் அவர்களாகவே வழங்கியதாக கர்நாடகாவை சேர்ந்தவர் கூறியுள்ளார். நாங்கள் 6 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளோம், ஆனால் எங்களுக்கு சின்னத்தை ஒதுக்கவில்லை.

டார்ச் லைட் சின்னத்தை கமலுக்கு ஒதுக்கிய பிறகு தான், எங்களுக்கு இந்த விவகாரம் கவனத்திற்கு வந்தது. 7 சதவீத வாக்குகளை கொண்டுள்ள நாம் தமிழர் கட்சிக்கு தான் கரும்பு விவசாயி சின்ளத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். புதிய சின்னத்தால் நாம் தமிழர் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்று குற்றம்சாட்டினார். புலி மற்றும் மயிலுக்கு தேசிய சின்னங்கள் என்று கூறிவிட்டு, பாஜகவுக்கு தேசிய மலரான தாமரையை சின்னமாக ஒதுக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சீமான், ஸ்டேப்ளர் பின், குண்டூசியை எல்லாம் சின்னம் என்றால் எப்படி ஏற்பது? என்று வினவினார்.

8% வாக்கு வங்கியை தொட விடாமல் தடுக்க சதி செய்யப்பட்டுள்ளதாகவும் கடுமையாக சாடினார். கோர்ட்டில் நடக்கும் வழக்கில் என்ன முடிவு வந்தாலும், கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்வேன். சின்னம் ஒதுக்கீடு முறையற்ற வகையில் உள்ளது. எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அதை வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post திட்டமிட்டே விவசாயி சின்னம் மறுப்பு!: திமுக, அதிமுகவுக்குப் பிறகு பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்.. சீமான் பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Adamuwa ,Seaman ,Chennai ,SEEMAN ,Pashamitte Pivasayi ,Sinnam ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக...