- எஸ்.சி.
- செயின்ட்
- காங்கிரஸ்
- மோடி
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- காங்கிரஸ் எஸ்.சி.
- ஜனாதிபதி
- ரஞ்சன் குமார்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: டியின் பத்தாண்டு கொடுங்கோல் ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரத்தை அடைந்திருக்கிறார்கள். இதில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது. பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களில் மொத்தம் 10,064 வழக்குகள் பதியப்பட்டன. இது முந்தைய ஆண்டை விட 14.3 சதவிகிதம் அதிகமாகும்.
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்தபோதிலும், அதற்கான தண்டனை விகிதம் குறைந்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் தான் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவருக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடந்துள்ளன. நாடு முழுவதும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் சுமேஷ் படுகொலை பட்டியலின மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இதுபற்றி வாயை திறக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ பிரதமர் முயலவில்லை என்பது வெட்கக்கேடானதாகும். ஒரு பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்.
ஆனால், பட்டியலின, பழங்குடியின மக்களை அழித்தொழிக்கும் வேலையை செய்யும் பாஜக மாநில முதல்வர்களுக்கு மோடி ஆதரவாக இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. எனவே, மார்ச் 4ம் தேதி(இன்று) சென்னைக்கு வரும் மோடியை எதிர்த்து நூதன முறையில் போராட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி.,எஸ்.டி., பிரிவு சார்பில் முடிவு செய்துள்ளது. அனைத்துக் கட்சியினரும், அமைப்புகளும், ஜனநாயக சக்திகளும் இந்தப் போராட்டத்துக்கு துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன். வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின மக்கள் சந்தித்த கொடுமை சொல்லிமாளாது: காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு கடும் கண்டனம் appeared first on Dinakaran.