×

மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் SC/ ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? காவல் துறைக்கு மாநில SC/ST நல ஆணையம் கேள்வி

சென்னை: மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் SC/ ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? என காவல் துறைக்கு மாநில SC/ST நல ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவி விடுதியில் இருந்தவர் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காணாமல் போன அப்பெண் ஜூலை 8ம் தேதி விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் உறவினர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை கடத்தியவரின் செல்போன் பிடிபட்டது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஆண்டனி ஆகாஷ் என்பவர், அப்பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஒரு மாததிற்குபின் விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியது. இச்சம்பவம் நடந்த 5 மாதங்கள் ஆகியும், காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் கிடப்பில் போட்டதாக விருதாச்சல காவல் ஆய்வாளர் மீது பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு SC ST நல ஆணையம் இவ்வழக்கை கையில் எடுத்த பின், கடந்த 14ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட ஆண்டனி மீது பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து போலீஸ் கைது செய்தது. 5 மாதங்களாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து தடயங்களை சேகரிக்காமல் வழக்கை கிடப்பில் போட்டது மட்டுமல்லாமல், வழக்கிற்கான அறிவியல் ரீதியான தடயங்களையும் அழித்துள்ளதாக கருதி, ஆய்வாளரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் ஆணையத்திடம் முறையீடு செய்தனர்.

இந்த நிலையில், மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், SC/ ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? என காவல் துறைக்கு மாநில SC/ST நல ஆணையம் கேள்வி எழுப்பியதுடன். அறிவியல் ரீதியான தடயங்களை அழித்ததாக ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு வைத்து. இந்த வழக்கு தொடர்பாக நவம்பர்.11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய விருதாச்சலம் காவல் ஆய்வாளருக்கு SC/ST நல ஆணையம் உத்தரவிட்டது.

The post மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் SC/ ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதியாதது ஏன்? காவல் துறைக்கு மாநில SC/ST நல ஆணையம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : State SC/ST Welfare Commission ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள காவலர்களுக்கு பயண அட்டை