×

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்; காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

ஜம்மு: காஷ்மீரில் கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர். காஷ்மீரில் பனிப்பொழிவுடன் சேர்ந்து கடந்த 2 நாட்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, நாட்டின் பிற பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

பந்தியால் அருகே சாலையின் ஒரு பகுதி முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ராம்பன் மாவட்டம் பனிஹாலில் காஷ்மீரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த 200 சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இதே போல, காப்டேரியா மோர் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய வாகனத்தை போலீசார் மீட்டு சுற்றுலா பயணிகளை காப்பாற்றினர்.

நச்லானா பகுதியில் பாறைகள் உருண்டதில் அங்கு சிக்கிய 6 பேர் கொண்ட குடும்பத்தை போலீசார் மீட்டனர். இதன் காரணமாக நகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ரெசாய் பகுதியில் கனமழையால் மண்ணில் வீடு புதைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.

The post ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்; காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Srinagar National Highway ,Kashmir ,Jammu ,nagar National Highway ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...