×

காவல் அலுவலர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

 

சிவகங்கை, மார்ச் 4: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு மாவட்ட அமர்வு நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுந்தரராஜன், இளைஞர் நீதிக் குழுமம் நீதித்துறை நடுவர் அனிதாகிருஸ்டி முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்து பேசியதாவது: குழந்தைகளுக்காக பேசுவதற்கு யாருமில்லை, அவர்களுக்காக குழந்தைகள் நல காவலர்கள் தான் பேச வேண்டும். அதற்காக இந்த பயிற்சி ஏற்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகள் பேசுவதற்காக காவல் நிலையங்களில் தனி அறை ஏற்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து பணிகளையும் குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் சிறப்பாக கையாள வேண்டும். இவ்வாறு பேசினார்.

இப்பயிற்சியில் காவல் துறை செயல்பாடுகள் குறித்தும், குழந்தைகள் சம்மந்தமாக சட்டங்கள், இளைஞர் நீதிக்குழுமத்தை கையாளும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. சிறப்பு சிறார் காவல் அலகு டிஎஸ்பி பிருந்தா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை, குழந்தைகள் நலக்குழு தலைவர் சாந்தி, இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் சிவதுரை, சிறப்பு வழக்கறிஞர் தனலெட்சுமி, குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குநர் செந்தில்குமார், நன்னடத்தை அலுவலர் மணிமேகலை மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காவல் அலுவலர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Collector's Office ,Sessions ,Judge ,Sarathraj ,Social Security Department ,District Child Protection Office ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்