×

குந்தா தாலுகாவில் போலியோ சொட்டு மருந்து

 

மஞ்சூர், மார்ச்4: குந்தா பகுதியில் 50க்கும் மேற்பட்ட மையங்களில் வடமாநில தொழிலாளர் குழந்தைகள் உள்பட 1,700 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நேற்று 5 வயதுகுட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவில் பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சார்பில் பள்ளிகள்,அங்கன்வாடி மையங்கள், பஸ்நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 50க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டது.

இதுதவிர அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பிறந்த குழந்தைகள் முதல் 5வயதுகுட்பட்ட குழந்தைகளை தாய்மார்கள் மையங்களுக்கு அழைத்து சென்று ஆர்வத்துடன் சொட்டு மருந்து புகட்டினார்கள்.

மஞ்சூர்,கோரகுந்தா, சாம்ராஜ் எஸ்டேட், தேவபெட்டா எஸ்டேட் போன்ற தேயிலை எஸ்டேட்டுகளில் பணிபுரியும் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் குழந்தைகளை மையங்களுக்கு அழைத்து சென்று சொட்டு மருந்து புகட்டினர். குந்தா தாலுகாவை பொருத்தமட்டில் நேற்று 50க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் சுமார் 1,700 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்தனர்.

The post குந்தா தாலுகாவில் போலியோ சொட்டு மருந்து appeared first on Dinakaran.

Tags : Kunta taluk ,Manjoor ,North State ,Kunta ,Tamil Nadu ,Nilagiri ,
× RELATED வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு