×

காஞ்சிபுரத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நீதிமன்றம்: உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்

 

காஞ்சிபுரம், மார்ச் 4: காஞ்சிபுரத்தில் 123 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் திறந்து வைத்தார். இதில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழக்குகள் தீர்வு கண்டு மக்கள் மனதில் நின்ற ஒரு நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது.

இந்த பழமையான நீதிமன்ற சிதிலமடைந்து கட்டிடம் பயன்படுத்தாத முடியாதநிலையில் காணப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றத்தை பழமை மாறாமல் அதே பொலிவுடன் சீரமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததால், மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 123 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றத்தின் படியே புதிய தொழில் நுட்பத்துடன் ஆங்காங்கே தேவையான வசதிகளை செய்து புதுப்பிக்கப்பட்டது.

இதனை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவுக்கு பின்னர், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி செம்மல் இருக்கையில் அமர்ந்து வழக்குப் பணியை தொடர்ந்தார்.

The post காஞ்சிபுரத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நீதிமன்றம்: உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Kanchipuram ,Judge ,Anita Sumanth ,Justice ,Krishnan Ramasamy ,Law Minister ,Raghupathi ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...