×

ரிங் ரோடு விரிவுபடுத்தும் பணி தீவிரம் மாநகராட்சியில் இன்று 101 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஈரோடு, மார்ச் 3: ஈரோடு மாநகராட்சியில் இன்று 101 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் கூறியதாவது: நாட்டில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் வராமல் தடுக்க போலியோ சொட்டு மருந்து தின முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (3ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்டம் முழுவதும் 1,412 இடங்களில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 1.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 101 இடங்களில் சுமார் 30 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையம், துணை சுகாதார நல வாழ்வு மையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகளை போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்து வந்து, போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரிங் ரோடு விரிவுபடுத்தும் பணி தீவிரம் மாநகராட்சியில் இன்று 101 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.

Tags : Polio ,camp ,Erode ,Polio Drip ,Erode Corporation ,Dr. ,Prakash ,City Health Officer ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...