×

ராகிங் கொடுமைக்கு மாணவர் பலி; துணைவேந்தர் சஸ்பெண்ட்: கேரள கவர்னர் நடவடிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டைச் சேர்ந்த சித்தார்த் (20) என்ற மாணவர் வயநாடு மாவட்டம் பூக்கோட்டிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 18ம் தேதி இவர் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் மாணவர் சித்தார்த் சீனியர் மாணவர்களால் ராகிங் கொடுமைக்கு கொடூரமாக இரையானது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் அருண், கல்லூரி இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) செயலாளர் இப்சான் உள்பட 18 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த இரு நாட்களில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இது தவிர சித்தார்த்தை ராகிங் செய்த 31 பேர் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் கேரளாவில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சசீந்திரநாத்தை கவர்னர் ஆரிப் முகம்மது கான் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் சிஞ்சு ராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post ராகிங் கொடுமைக்கு மாணவர் பலி; துணைவேந்தர் சஸ்பெண்ட்: கேரள கவர்னர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala Governor Action ,Thiruvananthapuram ,Siddharth ,Nedumangat ,Pookotte ,Wayanad district ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!