×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா : அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்கின்றனர்

மதுராந்தகம், மார்ச் 3: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 84வது பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று முன்தினம் ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்பிவிற்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.ரமேஷ் கலந்து கொண்டார்.ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். காலை 10 மணிக்கு சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சேலம் மற்றும் நாமக்கல் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்தினை வெள்ளி ரதத்தில் வைத்து சித்தர் பீடத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் தேவி ரமேஷ் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.அன்பழகன் துவக்கி வைத்தார். காலை 10 மணியளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவ சிலையுடன் தங்கரதம் சித்தர் பீடத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் பிறந்த நாளான இன்று அதிகாலை சுயம்பு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு அடிகளார் திருவுருவப் பட மலர் அலங்கார ரத ஊர்வலம் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தொழில் அதிபர் ஜெய் கணேஷ், உமாதேவி, ஆன்மிக இயக்க தலைமை செயல் அதிகாரி வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் அருட்பிரசாதம் வழங்க உள்ளனர். மாலை 3.30 மணியளவில் மக்கள் நலப்பணி விழா மற்றும் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கலை அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன், ஜகத்ரட்சகன் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். இதில் ₹3 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க சேலம் மற்றும் நாமக்கல் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் பிறந்தநாள் விழா : அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Bangaru Adikalar ,Melmaruvathur ,Adiparashakti Siddhar Peedam ,Madhurantagam ,Adiparashakti Siddhar Peetha ,Bangaru Adigalar ,Adiparashakti Amman ,Swayambi ,Dr. ,Ramesh ,Managing Director ,Adiparashakti Hospital ,
× RELATED பங்காரு அடிகளார் இல்ல திருமணம்...