×

கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்

 

திருப்பூர், மார்ச்2: கோடை காலம் துவங்கியதால் திருப்பூர் குமரன் ரோட்டில் போக்குவரத்து போலீசார் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், குளிர்பானங்களை மாநகர போலீஸ் துனை கமிஷனர் வழங்கினார். கோடை கால தாக்கம் துவங்கியதால்,கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்பானங்கள் வழங்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், திருப்பூர் மாநகரில் போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு திருப்பூர் குமரன் ரோட்டில் குளிர்பானம் வழங்கி துணை கமிஷனர் ராஜராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பகுதியில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கும் குளிர்பானங்களை வழங்கினார். இந்நிகழ்வில் கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில்குமார்,போக்குவரத்து உதவி கமிஷனர் சுப்புராமன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன்,வடக்கு இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Kumaran Road ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...