×

நாகப்பட்டினம் நகராட்சியில் சிறப்பு முகாமில் ரூ.8.20 லட்சம் வரி வசூல்

 

நாகப்பட்டினம்,மார்ச் 2: நாகப்பட்டினம் நகராட்சியில் நடந்த வரி வசூல் முகாமில் ரூ.8.20 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் நாராயணன் கூறினார். நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையில் நகராட்சி பொறியாளர், மேலாளர், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வரி வசூல் பணியாளர்களுடன் வரி வசூல் முகாம் நாகப்பட்டினம் நகர பகுதியில் நடந்தது. இதில் நாகப்பட்டினம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் குத்தகை இனங்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான தொகையை செலுத்த தவறியவர்களின் குடிநீர் துண்டிப்பு செய்தல்,

பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு செய்யவும், நீண்ட காலமாக வரி செலுத்தாத நபர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஏதுவாக நகராட்சி ஜப்தி வாகனத்துடன் தீவிர வரி வசூல் நடந்தது. இதில் ரூ.8.20 லட்சம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து வரி வசூல் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் நாராயணன் கூறினார். பொதுத் தேர்வுகள் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 36 பேரும், துறை அலுவலர்கள் 36 பேரும், வழித்தட அலுவலர்கள் 10 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 456 பேரும், நிலையான பறக்கும்படை 72, பறக்கும்படை 16, அலுவலக பணியாளர்கள் 90 பேரும் என மொத்தம் 716 நபர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

The post நாகப்பட்டினம் நகராட்சியில் சிறப்பு முகாமில் ரூ.8.20 லட்சம் வரி வசூல் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Municipal commissioner ,Narayanan ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்