×

செயல் அலுவலர் பதவிக்கான தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்ற இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 7ஏ பணியில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு 1) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கு பதிவேற்றம் செய்யப்பட்ட சில சான்றிதழ்கள், சரியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. இவர்கள் வரும் 15ம் தேதி இரவு 11.59 மணிக்குள் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும்.

The post செயல் அலுவலர் பதவிக்கான தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்ற இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Ajay Yadav ,Dinakaran ,
× RELATED 6,244 பதவிக்கு 15.91 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு