×

வருவாய்த்துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: ராமதாஸ்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பணியிறக்கத்திலிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளில் முதன்மையானதான துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கம் செய்யப்படாமல் பாதுகாப்பதற்கான அரசாணையை தமிழக அரசு ) வெளியிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மீதமுள்ள 9 கோரிக்கைகளில் குறைந்தது 5 கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டும்.

The post வருவாய்த்துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி: ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,CHENNAI ,BAMA ,Ramadas ,Tamil Nadu ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...