×

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: ஐநாவில் இந்தியா திட்டவட்டம்

ஜெனீவா: ஐநா மனித உரிமை கவுன்சிலின் 55வது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கம் போல் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியாவின் மீது பாகிஸ்தான். குற்றம்சாட்டியது. இதேபோல் துருக்கியும் இந்தியாவிற்கு எதிராக கருத்து கூறியது. இதற்கு ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங் கூறியதாவது, ” இந்தியாவின் உள்விவகாரமான ஒரு விஷயத்தில் துருக்கி தெரிவித்த கருத்துக்கு நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்.

ரத்தத்தில் நனைந்து கிடக்கும் ஒரு நாடு கூறும் கருத்துக்கு கவனம் செலுத்த முடியாது. அது உலகெங்கிலும் அந்நாடு ஆதரவு அளிக்கும் தீவிரவாதத்தில் இருந்து சிந்தப்பட்ட ரத்தமாகும். ஐநா தடை விதித்த தீவிரவாதிகளை கொண்டாடும் நாடு. இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காக கவுன்சிலின் மேடை மீண்டும் தவறாக பயன்படுத்தப்படுவது துரதிஷ்டவசமானது. இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

The post காஷ்மீர் விவகாரத்தில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: ஐநாவில் இந்தியா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,UN ,Geneva ,UN Human ,Rights ,Council ,Kashmir ,Turkey ,Dinakaran ,
× RELATED பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு