×
Saravana Stores

பிரியாணியில் சிக்கன் பீஸ் இல்லாததால் தகராறு; கத்தியால் கழுத்தை அறுத்து பெண்ணை கொடூரமாக கொலைசெய்த தொழிலாளி

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணும் ஒரு வாலிபரும் பிரியாணி சாப்பிட்டனர். அப்போது பிரியாணியில் சிக்கன் இல்லாததால் ஆத்திரம் அடைந்த இளம்பெண், வாலிபரிடம் கடும் தகராறு செய்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், தன்னுடன் வந்த பெண்ணை சரமாரியாக தாக்கியதுடன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த சம்பவத்தை பார்த்து வியாபாரிகள் வந்ததும் வாலிபர் தப்பிவிட்டார்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து கொலையான இளம்பெண் யார், கொலை செய்த வாலிபர் யார் என்று விசாரித்துவந்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக பெண்ணின் படத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது சரியான அடையாளம் கிடைக்கவில்லை. கடைசியாக பெண்ணின் படத்தை வைத்து புழல் சிறையில் உள்ள பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தியபோது சென்னை மெரினா பகுதியை சேர்ந்த தேவி(30) என்பதும் விபசார அழகி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேவியுடன் மார்க்கெட்டுக்கு வந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கோயம்பேடு காவல் மாவட்டத்துக்கு புதிய துணை ஆணையர் உமையாள் பொறுப்பேற்ற பின் தலைமறைவாக உள்ள ரவுடிகள் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள வழிப்பறி கொள்ளையர்கள், கஞ்சா வியாபாரிகள், குட்கா விற்பனை செய்பவர்கள் மற்றும் கண்டுபிடிக்காமல்போன வழக்குகளை மீண்டும் பட்டியல் தயார் செய்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இதன்படி, கடந்த 2019ம் ஆண்டில் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தவர் செய்யாறு மாவட்டத்தை சேர்ந்த குணா(44) என்பதும் இவர் மனைவியை பிரிந்து கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்துவந்துள்ளார் என்றும் தெரிந்தது.

தேவி, குணா ஆகியோர் மதுபோதையில் பிரியாணி வாங்கிக்கொண்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சாப்பிடும்போது தேவிக்கு சிக்கன் கொடுக்க வில்லை என்ற காரணத்தால்தான் ஏற்பட்ட பிரச்னையில் தான் வைத்திருந்த கத்தியால் தேவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக குணாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post பிரியாணியில் சிக்கன் பீஸ் இல்லாததால் தகராறு; கத்தியால் கழுத்தை அறுத்து பெண்ணை கொடூரமாக கொலைசெய்த தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : biryani ,Annanagar ,Koyambedu ,Chennai ,
× RELATED பூக்கள் விலை கடும் சரிவு