×

மாநகர காவல் ஆணையர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாம்

திருச்சி, பிப்.29: திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாநகர காவல்ஆணையர் காமினி தலைமையில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டது. மக்களுடன் முதல்வா் முகாம், காவல்துறை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் ஆணையா் ஆகியோர்களிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்.

தமிழக முதல்வா் மற்றும் காவல்துறை இயக்குநா் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் நடத்த உத்தரவிட்டதன்போில், திருச்சி மாநகர காவல் ஆணையா் காமினி, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி நேற்று திருச்சி கே.கே.நகா் ஆயுதப்படை திருமண மண்டபத்தில்பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாநகர காவல் ஆணையா் காமினி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட மனுக்கள் மீது உரிய தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வா் முகாம், முதலமைச்சாின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநாிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 382 மனுக்கள் பெறப்பட்டு, 256 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 126 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகர காவல் ஆணையாிடம் அளித்த 317 மனுக்களில் 110 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இம்முகாமில், காவல் துணை ஆணையா் தெற்கு, காவல் சரக உதவி ஆணையா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனர்.

The post மாநகர காவல் ஆணையர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Trichchi ,Civilian Muhotheer Camp ,Municipal Police Commissioner ,Gamini ,Trichy Municipal Armed Forces ,Camp of Civilians ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...