×

குடவாசல் பேரூராட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது

வலங்கைமான், பிப். 29: குடவாசல் பேரூராட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த செயல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
குடவாசல் பேரூராட்சியில் 18 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் (இறைச்சி) மார்க்கெட்) ஆடு அடிக்கும் தொட்டியுடன் உள்ளது. ஆனால், இந்த கடைகள் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் போராட்டமும் நடைபெற்றது.
மேலும் குடவாசல் ஒகை பகுதியில் இருந்து அத்திக்கடை வரை பல

இடங்களில், மீன் கடைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கடைகள் சாலை ஓரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆடுகளை சாலை ஓரத்திலேயே வைத்து அறுக்கும் போது அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், மாணவர்களும் அச்சத்துடன், அருவருப்பாக பார்த்து செல்கிற நிலையும் உள்ளது. எனவே சுகாதாரமான முறையில் இறைச்சிகளை விற்பனை செய்ய, சாலை ஓரங்களில் உள்ள அனைத்து கடைகளையும் இறைச்சி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் ஆடுகளை ஆய்வு செய்த பின்னரே, இறைச்சிகள் விற்கப்பட வேண்டும்.

ஆடு அடிக்கும் தொட்டியை சீர் செய்து பயன் பாட்டுக் கொண்டு வரவேண்டும் என சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இதைமுன்னிட்டு பேரூராட்சி நிர்வாகம் தொடர் முயற்சியில் ஆடு அடிக்கும் தொட்டியை சீர் செய்தும் கால்நடை மருத்துவர் மற்றும் சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் ஆட்டை ஆய்வு செய்து ஆட்டுக்கு கடுக்கான் சீல் வைத்து ஆட்டை அறுக்கும் முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் சாலை ஓரங்களில் உள்ள இறைச்சி கடைகளை உணவு பாதுகாப்பு அலுவலர் மகேஷ் ஆய்வு செய்தார். மேலும் சாலை ஓரங்களில் இறைச்சி கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் பேரூராட்சி வணிக வளாகத்தில் இறைச்சிக் கடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் வழங்கியும்,
ஒலிபெருக்கி அறிவிப்பும் பேரூராட்சியின் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆடு அடிக்கும் ஆட்டுத் தொட்டி பயன்பாட்டுக்கு வந்துள்ளதும், உணவு
பாதுகாப்பு அலுவலர் மற்றும் மருத்துவர் முன்னிலையில் கண்காணித்து ஆடுகளை ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் இறைச்சிகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் செயல் பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

The post குடவாசல் பேரூராட்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Gudavasal municipality ,Walangaiman ,Kudavasal Municipality ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...