×

திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பிப். 29: திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் பிடிக்கும் உரிமையையும் பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ‘கோ பேக் மோடி’ என கோஷமிட்டனர். இதில் பகுதி செயலாளர்கள் அப்பாஸ் மந்திரி, உதயகுமார், நாகலட்சுமி, மதுரை வீரன், துணை தலைவர் அப்துல் ரகுமான், மச்சக்காளை, பாலா, மகிளா நிர்வாகி சுமதி, காஜாமைதீன், இளைஞர் நிர்வாகிகள் சாகுல் நவ்பீல், முகமது அலியார், ஜோதி ராமலிங்கம், தேசிய ஒருமைப்பாட்டு இயக்க மாநில தலைவர் அப்துல் ஜாபர், நிர்வாகி வேங்கை ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Dindigul ,Municipal District Congress ,Dindigul Manikundu ,Metropolitan District ,President ,Durai Manikandan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...