- முதல் அமைச்சர்
- ரேவந்த் ரெட்டி
- தெலுங்கானா
- திருமலா
- தெலுங்கானா முதலமைச்சர்
- காங்கிரஸ்
- தெலுங்கானா செயலகம்
திருமலை: தெலங்கானாவில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். நேற்றுமுன்தினம் தெலங்கானா தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ₹500க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
கிரஹஜோதி என்ற இலவச மின்சார திட்டத்தின் மூலம் தெலங்கானாவில் 83 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 90 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் வைத்துள்ள நிலையில் அவர்கள் அனைவருக்கும் ₹500 விலைக்கு காஸ் சிலிண்டர் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் காஸ் விநியோகஸ்தர்களுக்கு அரசு மானியத்தொகை வழங்க உள்ளது.
The post 200 யூனிட் இலவச மின்சாரம், ₹500க்கு சமையல் காஸ் சிலிண்டர்: தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.