ஐதராபாத்: தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிராபகர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு இணங்க, தெலங்கானாவில் ஒவ்வொரு குடும்பத்தையும் உள்ளடக்கிய சாதிவாரி கணக்கெடுப்பு பணி நவம்பர் 4,5 தேதிகளில் தொடங்கி, நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 80,000 அரசு ஊழியர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக அவர்களுக்கு தனி பயிற்சி அளிக்கப்படும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.
The post தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நவ.30க்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.