×

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் அறிமுக வீரர் துருவ் ஜூரல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 3 -1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் தரவரிசை பட்டியலில் முன்னேற்றமடைந்துள்ளனர்.

அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 3 புள்ளிகள் முன்னிலை பெற்று 727 புள்ளிகளுடன் 12வது இடத்திற்கு முன்னேறினார். ஷுப்மன் கில் 4 புள்ளிகள் முன்னிலை பெற்று 616 புள்ளிகளுடன் 31வது இடத்திற்கும், அறிமுக வீரர் ஜூரல் 31 புள்ளிகள் முன்னிலை பெற்று 461 புள்ளிகளுடன் 69 இடத்திற்கும் முன்னேறினர்.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 893 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ஜோ ரூட் 3வது இடத்திற்கு முன்னேறினார். இந்திய வீரர்கள் விராட் கோலி 9வது இடத்திலும், ரோஹித் ஷர்மா 13வது இடத்திலும், ரிஷப் பண்ட் 14வது இடத்திலும் உள்ளனர்.

The post ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்! appeared first on Dinakaran.

Tags : ICC Test ,Dubai ,Yashashvi Jaiswal ,Shubman Gill ,Dhruv Jural ,ICC ,India ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்திற்கு...